இந்தியா

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை; சீக்கியர்கள் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு

21st Nov 2021 04:57 PM

ADVERTISEMENT

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளார். இதனால் அவரது ட்விட்டர் கணக்கு இந்தாண்டு மே மாதம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. 

இதன் காரணமாக, கங்கணா, இன்ஸ்டாகிராம் மூலம் தனது கருத்துகளை தெரிவித்துவருகிறார். விவசாயிகளை ஜிகாதிகளாக ஒப்பிட்டு பேசிய அவர் தற்போது சீக்கியர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார்.

கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவில், "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது காலணியில் போட்டு நசுக்கினார். அவர் (இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) கொசுக்களைப் போல் நசுக்கினார். 

அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இன்ஸ்டாகிராமில் அடுத்த ஸ்டோரியில் இந்திரா காந்தியின் படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், "கலிஸ்தானி இயக்கம் எழுச்சி பெறும் நிலையில், அவரது (இந்திரா) கதை முன்னெப்போதையும் விட இப்போது தான் மிகவும் பொருத்தமானது" எனப் பதிவிட்டுள்ளார். 

சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் 1984 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் அவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க | ''எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி'': 'ஜெய் பீம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து சூர்யா நெகிழ்ச்சி

இந்தச் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக கங்கனா மீது தில்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கங்கனா ரணாவத்தின் இந்தச் சர்ச்சை பதிவுக்கு குருத்வாரா அமைப்பும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கங்கனா சீக்கியர்களை இழிவான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகவும் சாடியுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT