இந்தியா

அசோக் கெலாட் ஆலோசகர்களாக 6 எம்எல்ஏ-க்கள் நியமனம்

21st Nov 2021 09:32 PM

ADVERTISEMENT


ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பிறகு, 6 எம்எல்ஏ-க்கள் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் அமைச்சரவை முழுவதுமாக ராஜிநாமா செய்து, புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது. புதிதாக 15 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிக்கஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச பயணம்: உத்தரகண்டில் கேஜரிவால் வாக்குறுதி

முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜிதேந்திர சிங், பாபுலால் நகர், ராஜ்குமார் சர்மா, சன்யம் லோதா, ராம்கேஷ் மீனா மற்றும் டேனிஷ் அப்ரர் ஆகிய 6 எம்எல்ஏ-க்கள் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : rajasthan
ADVERTISEMENT
ADVERTISEMENT