இந்தியா

இந்திரா காந்தி பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை

19th Nov 2021 01:14 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

  இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை 

'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள். 

தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செய்தனர். 

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மக்கள். 

இதையடுத்து நாடாளுமன்றத்திலும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி மரியாதை. 

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

 

Tags : congress sonia gandhi இந்திரா காந்தி Indira Gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT