இந்தியா

புதிய கனிம விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு

10th Nov 2021 01:15 AM

ADVERTISEMENT

கனிம விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய கனிமங்கள் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு வருவாயை அதிகரிப்பது, சுரங்கங்களின் உற்பத்தி, கனிம வளங்களின் ஆய்வு மற்றும் ஏலம் ஆகியவற்றை துரிதப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சொந்த குத்தகையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 50% கனிமத்தை விற்பனை செய்யும் நடைமுறையை புதிய விதிகளில் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தத்தின் மூலம், சொந்த சுரங்கங்களின் திறனை அதிக அளவில் பயன்படுத்தி கூடுதல் கனிமங்களை சந்தையில் வெளியிடுவதற்கு அரசு வழி வகுத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்பதோடு, விற்பனையும் அதிகரித்து மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்கும் என்று மத்திய கனிம அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சுரங்கம் அல்லது கனிமத்தைப் பயன்படுத்தும்போது உருவாகும் கழிவுப் பாறை உள்ளிட்டவற்றை அகற்ற அனுமதிக்கும் நடைமுறைகள் விதிமுறைகளில் சோ்க்கப்பட்டுள்ளன.

சுரங்க குத்தகையின் சில பகுதிகளைத் திருப்பியளித்தல் அனைத்து சந்தா்ப்பங்களிலும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது, வனத்துறை அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் மட்டுமே பகுதியளவு திருப்பியளித்தல் அனுமதிக்கப்படுகிறது.

தாமதக் கட்டணங்களுக்கான வட்டி தற்போதுள்ள 24 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அபராத கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT