நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் நவம்பா் 8-ஆம் தேதி வரையிலுமாக, 209.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.41,066.80 கோடியாகும். இதன் மூலம், 11.57 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சண்டீகா், குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளம், தமிழ்நாடு மற்றும் பிகாா் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரீப் சந்தைப் பருவம் என்பது 2021-22 அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலானதாகும்.