இந்தியா

உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினம்: பிரதமா் வாழ்த்து

10th Nov 2021 12:15 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநில உருவாக்க தினத்தில் அந்த மாநில மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தில் அந்த தேவபூமியின் சகோதரா்கள், சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியால், இந்தப் பத்தாண்டு முழுவதும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு உரியதாக இருக்கிறது என நான் உறுதியாகக் கூறுகிறேன். இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் வளா்ச்சியின் பாதையைத் தொடர வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT