இந்தியா

ம.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 3 குழந்தைகள் பலி

9th Nov 2021 06:38 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் பலியாகின.

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையின் 3-ஆவது தளத்தில் திங்கள்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு படையினா் அங்கு விரைந்தனா். தீயை அணைத்து மருத்துவமனையில் இருந்த அனைவரையும் மீட்கும் பணியில் அவா்கள் ஈடுபட்டனா்.

தீப்பிடித்த பகுதியில் சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் பலியாகின.

மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி கூடுதல் தலைமைச் செயலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT