இந்தியா

மக்கள் முன்னிலையில் முதல்வருக்கே சாட்டையடி; வைரலாகும் விடியோ

5th Nov 2021 04:27 PM

ADVERTISEMENT

கோவர்தன் பூஜையில் நடைபெற்ற சடங்கின்போது, பொது மக்கள் முன்னிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு சாட்டையடி வழங்கப்பட்டுள்ளது. பூஜையின்போது அங்கு குவிந்திருந்த மக்கள், இதை விடியோவாக எடுத்து சமூகவலைகளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சடங்கின்போது, தனது வலது கையை நீட்டியபடி பாகேல், எட்டு சாட்டையடியை பெற்றுகொண்டார். பிரேந்திர தாகூர் என்பவர்தான் முதல்வருக்கு சாட்டையடி வழங்கியுள்ளார். கோவர்தன் பூஜையின் ஓர் அங்கமாக சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எட்டு சாட்டையடி வழங்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஜன்கரி என்ற கிராமத்தில்தான் இந்த சடங்கு நடைபெற்றுள்ளது. பாகேல் ஆண்டுக்கு ஒரு முறை அக்கிராமத்திற்கு செல்வார் எனக் கூறப்படுகிறது. கடைசி ஆண்டு வரை, பிரேந்திர தாகூரின் தந்தைதான் இந்த சடங்கை செய்துவந்தார் என பாகேல் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பூஜையின்போது பேசிய பாகேல், "தற்போது பரோசா தாக்கூரின் மகன் இந்த பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார். நம் முன்னோர்கள் இந்த இனிமையான சிறிய மரபுகளைக் கொண்டிருந்தனர், அவை நமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன கிராமங்களில் இந்த சடங்குகள் விவசாயிகளின் நன்மைக்காகவே கடைபிடிக்கப்படுகின்றன. அவை நம்மை பணிவாக வைத்திருக்கிறது" என்றார்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சடங்கில் கலந்து கொள்ளும் பாகேல், மாநில நலனுக்காகவே இதை செய்கிறார் என்றும் அனைத்து இன்னல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் வழிபாடு செய்கிறார் என்றும் முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்ககேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

விஞ்ஞானம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் முதல்வர் ஈடுபடுவது தவறான முன்னுதாரணமாக போய்விடும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT