இந்தியா

மாநிலங்கள் உருவான நாள்: மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

1st Nov 2021 01:47 PM

ADVERTISEMENT

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட  மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.

அதுபோன்று, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் நவம்பர் 1 ஆம் தேதி மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன. 

இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மேற்குறிப்பிட்ட மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இனி ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT