இந்தியா

மீண்டும் வீட்டுக் காவலில் மெஹபூபா முஃப்தி

1st Nov 2021 05:13 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஷோபியன் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 24-ம் தேதி சிஆர்பிஎஃப் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஷாஹித் அகமது எனும் இளைஞன் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. ஷாஹித் அகமது மரணம் குறித்து விசாரணை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க மெஹபூபா முஃப்தி அனந்தநாக் செல்வதைத் தவிர்க்க அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கஉ.பி. தேர்தல்: இலவச ஸ்மார்ட்ஃபோன், ஸ்கூட்டி - பிரியங்கா அதிரடி

ADVERTISEMENT

அவர் மேலும் கூறியது: 

"மெஹபூபா முஃப்தி வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஷாஹின் அகமது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க விரும்பினார். ஆனால், அவரை அனுமதிக்காமல் வீட்டின் பிரதான நுழைவு வாயிலைக் காவல் துறையினர் பூட்டியுள்ளனர். நுழைவு வாயில் வெளியே காவல் துறை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது."

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அனந்தநாக் செல்ல அனுமதிக்கப்படவில்லை" என்றார்.

Tags : Mehbooba
ADVERTISEMENT
ADVERTISEMENT