இந்தியா

தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 531 பேருக்கு டெங்கு

1st Nov 2021 03:42 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 531 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதித்து 6 பேர் பலியாகியிருப்பதாகவும் தில்லி மாநகராட்சி கூறியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், தில்லியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,537 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT