இந்தியா

கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

1st Nov 2021 05:09 PM

ADVERTISEMENT

கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க | முதல் முறையாக.. நான்கு பேருக்கு கண்பார்வை அளித்த புனீத் ராஜ்குமாரின் கண்கள்

நேற்று  (அக்-31) ஞாயிற்றுக்கிழமை சார்ஜா , துபை , பக்ரைன் பகுதிகளிலிருந்து கொச்சி சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்தவர்களில் 7 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் கடத்தி வந்த 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

கைதான ஏழு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் . அவரிடமிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் நடந்த இந்தக் கடத்தலில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த அக்-27 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT