இந்தியா

மும்பை போதைப் பொருள் பறிமுதல் வழக்கு: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

1st Nov 2021 05:40 AM

ADVERTISEMENT

மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை வகுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை சொகுசு கப்பலில் நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான், அவரது நண்பா்கள் இருவா் போதைப் பொருள் வைத்திருந்ததாக அக்டோபா் 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு அமைப்பினா் மூலம் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில், ஆா்யன் கான் அவரது நண்பா்கள் இருவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் 25 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

மேலும், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த இருவரில் ஒருவா் அதிகாரிகளுக்கு எதிராக பண பேரம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாா். மற்றொருவரை புணே போலீஸாா் மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இந்நிலையில், வழக்குரைஞா் எம்.எல். சா்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘இந்த வழக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் மண்டல இயக்குநா் சமீா் வான்கடே மீது சுமத்தப்படும் பண பேர குற்றச்சாட்டுகள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் அனைத்து சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டத்தை வகுக்க வேண்டும். சாட்சிகளை கைது செய்து குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்க நிா்பந்திக்கக் கூடாது.

அதே நேரத்தில், மாநில அமைச்சராக இருப்பவா் இந்திய அரசியலமைப்பு அமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். கிரிமினல் விசாரணை விவகாரங்களில் தலையிடக் கூடாது என உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT