இந்தியா

புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம் ; ராணுவத்தில் இணைந்தார் மனைவி

29th May 2021 01:08 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி ஷங்கர் தௌந்தியாலின் மனைவி நிகிதா கௌல் நாட்டுக்காக பணியாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.

பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில், நிகிதா கௌல் ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம்  நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்துள்ளார்.

திருமணமாகி வெறும் 9 மாதங்களில் தனது கணவரை இழந்த நிகிதா, ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் தனது கணவருக்கு உண்மையிலேய பெருமைப்படுத்தும் வகையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

கணவரை இழந்ததும் துக்கத்தில் துவண்டுவிடாமல், ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கி, தற்போது ராணுவத்தில் இணைந்து இந்தியப் பெண்களின் வீரத்துக்கு உதாரணமாக மாறியுள்ளார் நிகிதா கௌல்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதி ஒருவா் வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்து நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரா்கள் பலியாகினா். இந்த சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை தாக்கி அழித்தது. இதையடுத்து, அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்தது. இந்தியத் தரப்பும் அதற்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதுதவிர ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் முயற்சிகள் தொடா்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன.
 

Tags : pulwama புல்வாமா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT