இந்தியா

காபூலில் இரண்டு வாரங்களுக்குப் பள்ளிகள் மூடல்

29th May 2021 12:56 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட 16 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த 2 வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. 

கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பொது சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

காபூல், கஸ்னி, ஹெல்மண்ட், காந்தஹார், லோகர், நங்கர்ஹார், பக்தியா, பர்வான், மைதானம் வார்தக், பஞ்ச்ஷீர், பால்க், லக்மன், படாக்ஷன், கபீசா, குண்டுஸ் மற்றும் நிம்ரோஸ் ஆகிய இடங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 3,800 மாதிரிகளில் 977 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 18 இறப்புகள் மற்றும் 157 பேர் குணமடைந்தனர். 

பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 70,107 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 2,899 ஆகவும் உள்ளது. மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 57,119 என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT