இந்தியா

1000-க்கும் மேற்பட்ட கட்டாக் கிராமங்களை தொட்டுப்பார்க்காத கரோனா 

29th May 2021 05:46 PM

ADVERTISEMENT

 

கட்டாக்: ஆந்திர மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இதுவரை கரோனா இரண்டாம் அலை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, தற்போது மெல்ல குறையத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரோனா இரண்டாம் அலை இதுவரை தொட்டுப்பார்க்காதது பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கட்டாக் அருகே சுமார் 1,028 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் எதிலும் இதுவரை ஒரு கரோனா பாதிப்புக் கூட பதிவாகவில்லை. எனவே, கட்டாக் மாவட்ட நிர்வாகம் இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கிராமத் தலைவர்கள், கிராம உறுப்பினர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இந்தக் கிராமங்களில் மிகச் சிறப்பான பின்பற்றப்படுகின்றன. இதனை கிராம நிர்வாகங்கள் கண்காணித்து வருகின்றன.
 

Tags : Cuttack Covid-1
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT