இந்தியா

மூன்று மாதங்களுக்குப் பின் மும்பையில் மிகக் குறைவான தொற்று பாதிப்பு

29th May 2021 11:25 AM

ADVERTISEMENT


மும்பையில் வெள்ளிக்கிழமை புதிதாக 929 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த மார்ச் 2ஆம் தேதிக்குப் பின் பதிவாகும் மிகக் குறைந்த அளவாகும்.

அதுபோலவே, மும்பையில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்  30 ஆகக் குறைந்துள்ளது. இது ஏப்ரல்13க்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

மும்பையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.03 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 14,808 ஆகவும் உள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி மும்பையில் 849 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதும், ஏப்ரல் 13ஆம் தேதி கரோனாவுக்கு 26 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
 

Tags : mumbai COVID-19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT