இந்தியா

மகாராஷ்டிரத்தில் 94 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

29th May 2021 09:35 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவில் இருந்து வருவதால் மொத்த பலி எண்ணிக்கை சனிக்கிழமை 94 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.   

வெள்ளிக்கிழமை 973 பலி எண்ணிக்கைகள் பதிவான நிலையில், சனிக்கிழமை 832 பலி எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 94,030 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் புதிதாக 20,295 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 57,13,215 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,76,573 ஆகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

மும்பையில் வெள்ளிக்கிழமை 924 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியான நிலையில், சனிக்கிழமை மீண்டும் ஆயிரத்தைத் தாண்டி 1,038 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT