இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை  7 ஆக உயர்வு 

29th May 2021 11:50 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள  கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.

26 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில் 29 குடியிருப்புகள் உள்ளன. 
இறந்தவர்கள் கட்டடத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்  ஆவர். 

நேற்றிரவு 9 மணியளவில், ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டட  ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர்  உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க  மாவட்ட அமைச்சர் ஏகாந்த் ஷிண்டே தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT