இந்தியா

மத்தியப் பிரதேசம்: கிளெர்க் வீட்டில் ரூ.2.7 கோடி பணம், 8 கிலோ தங்கம் பறிமுதல்

29th May 2021 11:46 AM

ADVERTISEMENT


போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் கிளெர்க்காக பணியாற்றி வருபவரின் வீட்டிலிருந்து ரூ.2.7 கோடி பணமும், 8 கிலோ தங்கத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து லஞ்சம் பெற்ற போது, இந்திய உணவுக் கழக அலுவலக மேலாளர்கள் மூன்று பேரும், கிளர்க்கும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட கிளர்க் கிஷோர் மீனா வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அந்த வீட்டில் ஏராளமான பெட்டகங்களும், பணம் எண்ணும் இயந்திரங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சோதனையில், அவரது வீட்டிலிருந்து ரூ.2.7 கோடி ரொக்கப் பணமும் 8 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Madhya Pradesh fci
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT