இந்தியா

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: பிரதமர்

29th May 2021 07:09 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியான அறிவிப்பு:

"கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக் கடனுக்கு உதவிகள் வழங்கப்படும். அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும். 

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதைக் கடக்கும் வரை ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச காப்பீடு வழங்கப்படும். அதற்கான தொகை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்படும்."

Tags : prime minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT