இந்தியா

ராஜஸ்தானில் மருத்துவர்களாக இருந்த கணவன் - மனைவி சுட்டுக் கொலை

29th May 2021 04:00 PM

ADVERTISEMENT


பாரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில்,  மருத்துவர்களாக இருக்கும் கணவன் - மனைவி, பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மருத்துவர்களாக இருக்கும் கணவன் - மனைவி இருவரும் தங்களது வீட்டிலிருந்து கிளம்பி தங்களது கிளினிக்குக்கு வருகிறார்கள். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹரிதாஸ் பேருந்து நிலையம் அருகே வந்த இருவர், அவர்களை சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
இருவரது உடல்களும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்து.

சுட்டுக் கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Tags : Rajasthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT