இந்தியா

தில்லியில் ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு: கேஜரிவால்

29th May 2021 01:53 PM

ADVERTISEMENT

 

தேசிய தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 900 புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

புதிய தொற்று நோய்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், மேலும் தளர்வு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

தலைநகரில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்துவதற்கான செயல்முறை திங்கள்கிழமை முதல் தொடங்கும், முதல் கட்டமாகக் கட்டுமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு வாரத்திற்குத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

கரோனா இரண்டாவது அலையைக் கருத்தில் கொண்டு ஆறு வாரங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 900 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிப்பு 1000க்குக் கீழே குறைந்துள்ளன. மேலும், 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் கிடைத்தவுடன், செலுத்தத் தொடங்குவோம் என்றார்.

Tags : delhi coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT