இந்தியா

கோவாவில் இதுவரை 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: அரசு

29th May 2021 01:23 PM

ADVERTISEMENT

 

கோவாவில் இதுவரை மொத்தம் ஐந்து லட்சம் செலுத்தப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

16 லட்சம் மக்கள்தொகை கொண்ட கோவாவில், கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு தரவுகளின்படி, மாநிலத்தில் மே 28 வரை ஐந்து லட்சம் தடுப்பூசி மருந்துகள் (இரண்டாவது டோஸாக) வழங்கப்பட்டுள்ளன.

மே 26-ஆம் தேதி நிலவரப்படி 95,886 பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதில், 3,00,923 பேர் முதல் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது. அதில்  18-44 மற்றும் 45-க்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் அடங்குவர்.

ADVERTISEMENT

டிக்கா உச்சவத்தின் முதல் பகுதியை மார்ச் 17 முதல் 23 வரை தடுப்பூசி திட்டத்தை அரசு ஏற்பாடு செய்திருந்தது, அதே நேரத்தில் இரண்டாம் கட்டமாக மே 26  அன்று அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றங்களிலும் தொடங்கியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது, 

டிக்கா உச்சவ்-2க்கு நாங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறோம், ஆனால் அதன் கீழ் அதிகமான மக்களை உள்ளடக்குவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

மாநிலத்தில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது இலக்கு என்று அவர் கூறினார்.

பாஜகவின் கோவா பிரிவுத் தலைவர் சதானந்த் தனவாடே கூறுகையில், 

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றதால் தடுப்பூசி போடுவதற்கு டிக்கா உச்சவ் பலருக்கு உதவியுள்ளது, டிக்கா உச்சவ் மக்கள்  மனதிலிருந்து தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்தை நீக்கியதோடு, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இது உதவியது, என்று அவர் கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT