இந்தியா

மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீட்டை நிறுத்த முடிவு: மத்திய அமைச்சர்

29th May 2021 05:20 PM

ADVERTISEMENT

மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீட்டை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நாள் ஒன்றுக்கு 33000 குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதைவிட பத்து மடங்கு கூடுதலாக, இன்று நாளொன்றிற்கு 3,50,000 குப்பிகள் கீழ் தயாரிக்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்தைத் தயாரிக்கும் ஆலைகளின் எண்ணிக்கையையும் ஒரே மாதத்தில் 20லிருந்து 60-ஆக அரசு உயர்த்தியிருக்கிறது. 

தேவைக்கும் அதிகமான மருந்துகள் தற்போது விநியோகம் செய்யப்படுவதால், ரெம்டெசிவிர் மருந்து, நாட்டில் போதிய அளவில் இருப்பு உள்ளது. மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீட்டை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் ரெம்டெசிவர் மருந்தின் இருப்பைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய முகமை மற்றும் மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவசரத் தேவைகளை எதிர்கொள்ளும் உத்தியாக 50 லட்சம் குப்பிகளை கொள்முதல் செய்யவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார். 

Tags : Remdesivir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT