இந்தியா

மற்றுமொரு அசாம் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி

29th May 2021 03:33 PM

ADVERTISEMENT


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது எம்எலஏ கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

ஐக்கிய மக்களின் விடுதலைக் கட்சி எம்எல்ஏவான லேஹோ ராம் போரோ கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியானார். அவருக்கு வயது 63.

அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை குவகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்சரி கரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் புதனன்று உயிரிழந்தார். 68 வயதாகும் மஜேந்திர நர்சரி போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவராக இருந்தார். அவர் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.
 

ADVERTISEMENT

Tags : COVID-19 Assam coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT