இந்தியா

கேரளத்தில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

29th May 2021 02:15 PM

ADVERTISEMENT

 

கேரளத்தின், ஹரிபாத் மாவட்டத்தின் கரீலகுளங்கராவில் சனிக்கிழமை  ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 

இன்று அதிகாலை 3 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த  விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் பலியானவர்களில் 25 வயது பெண், அவரது 5 வயது மகன்,  கேரள சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டம் (காபா) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  அவர்களது உறவினர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.  மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இவர்கள் மாவட்டத்தின் கயம்குளத்தைச் சேர்ந்தவர்கள். லாரியில் இருந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஆலப்புழாவில்  உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT