இந்தியா

நேபாள கிராமத்தில் ஒரே வாரத்தில் 13 பேர் பலி

29th May 2021 04:23 PM

ADVERTISEMENT

 

நேபாளத்தின், கோர்காவின் பார்பக் கிராமத்தில் மூன்று கரோனா நோயாளிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த மற்றவர்களும் கரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கந்தகி மாகாண சுகாதார இயக்குநரகம் இயக்குநர் டாக்டர் பினோத்பிந்து சர்மா கூறுகையில், 

மருத்துவர்கள் குழுக்கள் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் பார்பக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வார்டு 1 மற்றும் 2ல் மக்கள் அசாதாரணமாக இறப்பது குறித்து சுலிகோட் கிராமப்புற நகராட்சித் தலைவர் எங்களுக்குத் தெரிவித்ததையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற குழுக்களை நாங்கள் கிராமத்திற்கு அனுப்பியுள்ளோம். அணி திரும்பியவுடன் இறப்புகளுக்கான காரணங்கள் அறியப்படும் என்று டாக்டர் சர்மா கூறினார்.

கரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் மகாணத்தின் இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1092ல் அழைக்குமாறு தெரிவித்துள்ளது. 

தலைமை மாவட்ட அதிகாரி ஷாலிகிராம் சர்மா கூறுகையில், போகாராவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் குழு பி.சி.ஆர் சோதனைகளுக்காக கிராமத்தில் மாதிரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

பார்பக்கில் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளும் 6,000 மக்கள் தொகையும் உள்ளன. கிராமம் நெரிசலானதாக இருப்பதால், வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது 

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 6,855 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன, 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT