இந்தியா

பாகிஸ்தான் சாலை விபத்தில் 11 பேர் பலி

29th May 2021 03:23 PM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியான முஸாபராபாத் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை காலை, ராவல்பிண்டியிலிருந்து சகோதி பகுதியை நோக்கி இந்த வேன் சென்று கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளாக, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், வேனிலிருந்த 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT

Tags : accident islamabad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT