இந்தியா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூன் 30 வரை நீட்டிப்பு

28th May 2021 04:35 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுநோயால் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் சர்வதேச பயணிகள் விமான சேவை  நிறுத்தப்பட்டுள்ளன.

அதேசமயம் சிறப்பு சர்வதேச விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழும், ஜூலை முதல் குறிப்பிட்ட 28 நாடுகளுடனும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மே 31 முதல் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை விலக்கப்பட இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சரக்குப் போக்குவரத்துக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT