இந்தியா

தெலங்கானாவில் மூத்த மருத்துவர்களின் சம்பளம் 15% உயர்வு: அரசு அறிவிப்பு 

28th May 2021 01:28 PM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் மூத்த மருத்துவர்களின் சம்பளம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது, 

தெலங்கானா மாநிலத்தில் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மூத்த மருத்துவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள் பணி புறக்கணிக்க முடிவு செய்தனர். 

அதன்படி, மே 26ம் தேதி கரோனா தொடர்பான அனைத்து அவசரக்கால பிரிவுகளுக்கான சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆபத்தில் தள்ளப்பட்டனர். 

ADVERTISEMENT

பணி புறக்கணிப்பைத் தொடர்ந்து மூத்த மருத்துவர்களின் சம்பளத்தொகையை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசு  வெளியிட்ட அறிக்கையில், 

ஹைதராபாத்தின் மருத்துவக் கல்வி இயக்குநர் சார்பில் மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகையை மாதத்திற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80,500 ஆக உயர்த்துவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. 

இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் மேலும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT