இந்தியா

கரோனா பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும்: மத்திய சுகாதார அமைச்சகம் 

28th May 2021 04:15 PM

ADVERTISEMENT


புதுதில்லி: கரோனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த 44 நாள்ளுக்கு பின்னர் தினசரி தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 3,660 பேர் உயிரிழந்துள்ளனர்.  

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 23,43,152 பேராகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2,59,459 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,48,93,410 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 90.34 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அறிவிப்பில், கரோனா தொற்று பாதிப்பு உள்ள ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவற்றின் எச்சிலின் துகள்கள் வழியே கிருமி காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  

ADVERTISEMENT

தொற்று பாதித்த ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும், பேசும் போதும் அவரிடமிருந்து வெளியாகும் பெரிய துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்திற்குள் கீழே விழுந்துவிடும். அதேசமயம் அதிக நேரம் உயிருடன் இருக்க்ககூடிய ஏரோசோல் என அழைக்கப்படும் சிரிய எச்சில் துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். 

இந்த எச்சில் (ஏரோசோல்கள்) விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கு, கண் பகுதிகளை தொட்டால் அவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும். 
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்களில் ஏரோசோல்கள் விழுந்தால் வேகமாக பரவும். இதனால் முடிந்தவரை முகக்கவசம் , தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் நல்ல கற்றோட்டம் உள்ள பகுதிகளில் இருப்பது மிக முக்கியம். 

காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கரோனா தொற்று கட்டுக்குள் வரும். எனவே காற்றோட்டமான வகையில் வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்று ஆரம்பக் கட்டத்தில் தொற்று பாதித்த ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அந்த எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT