இந்தியா

கரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

28th May 2021 12:50 PM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை பின்பற்றுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் மே மாதத்துக்கான கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை ஏப்ரல்29-ஆம் தேதி வெளியிடிட்டிருந்தது. அந்த விதிமுறைகளை ஜூன் இறுதி வரை பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியை தனிமைப்படுத்துவது, கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, தேவையான மருத்துவ உபகரணங்கள் போன்றவை தடையின்றி கிடைப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தற்போதும் நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு வெளியிட்ட கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT