இந்தியா

லக்னௌவில் கரோனா நோயாளி பலி: உறவினர்கள் முற்றுகை

28th May 2021 11:20 AM

ADVERTISEMENT

 

லக்னௌவில் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவர் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

வைரஸ் தொற்று பாதித்த நோயாளியிடமிருந்து பெரும் தொகையை மருத்துவர் வசூலித்ததாகவும், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுதொடர்பாக காவல் ஆணையர் தாக்கூர் நடத்திய விசாரணையில், 

ADVERTISEMENT

இறந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவர் மீது கடினமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மருத்துவரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தலைமறைவாக உள்ள தாக்குதல் நடத்தியவர்களின் உறவினர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தாக்கப்பட்டவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார். 

சிகிச்சைக்காக சுமார் ரூ.2.5 லட்சம் செலவிடப்பட்டது. ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

இறந்தவரின் குடும்பத்தினர் பணத்தைத் திருப்பித் தருமாறு மருத்துவரை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவர் திருப்பித்தர மறுத்துவிட்டதால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். 

அடையாளம் தெரியாத நபர்கள் மீது மருத்துவரின் மனைவி சங்கீதா அளித்த புகாரைத் தொடர்ந்து வியாழக்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT