இந்தியா

‘கரோனா சிகிச்சைக்கான மருத்துவப் பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு’: நிர்மலா சீதாராமன்

28th May 2021 08:49 PM

ADVERTISEMENT

கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு  கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் மீதான வரி குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவப் பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். 

ADVERTISEMENT

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கரோனா சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் வரிவிலக்கு பட்டியலில் சேர்க்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.  

இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT