இந்தியா

தேவசம்போர்டின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியானது

28th May 2021 11:08 AM

ADVERTISEMENT

திருவனந்தபுரம்: கரோனா பெருந்தொற்று காரணமாக திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்தது.

சபரிமலை உள்பட கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கோயில்கள் அனைத்தும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோயில்களிலிருந்து கிடைக்கும் வருவாய் கொண்டு தான் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊதியம், ஓய்வூதியம் என ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது கோயில்கள் மூலம் வரும் வருவாய் இல்லாததால், தங்களது செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோயில்களின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து தற்போது ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.  2020-ஆம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால்  கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT