இந்தியா

யாஸ் புயல்: மத்திய அரசிடம் ரூ.20,000 கோடி நிவாரண நிதி கோரும் மம்தா

28th May 2021 06:27 PM

ADVERTISEMENT


மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20,000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

திகா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டுள்து. தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.20,000 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, திகா மற்றும் சுந்தர்பன் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.10,000 கோடி  நிவாரண நிதி கோரியுள்ளோம் என்றார்.

எங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உதவி கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. ஆனால், நானும், மாநில தலைமைச் செயலாளரும் பிரதமரை சந்தித்து அவரிடம் வெள்ளச் சேத ஆய்வறிக்கையை அளித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதிக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT