இந்தியா

ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் அமைப்பு

28th May 2021 03:43 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளது. 

ஸ்ரீநகர் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா கூறுகையில், 

ஸ்ரீநகர் முழுவதும் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட வற்புறுத்தி வருகிறோம். 
இந்த முகாம்கள் முக்கியமாக ஊடகவியலாளர்கள், கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவியது, ஆனால் இது உண்மையல்ல.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் ஷர்மீன் கூறுகையில், 

நாளொன்றுக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுவரை 40 பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். மக்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.

கரோனா பரவுவதைத் தடுப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரே கருவியாக இருப்பதால் தடுப்பூசி முக்கியமானது. கரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள தவறான தகவல்களுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

வதந்திகளை நம்புவதை விட விஞ்ஞான ஆதாரங்களை நாம் பின்பற்ற  வேண்டும் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT