இந்தியா

மேற்கு வங்கம்: ஜூலையில் 12, ஆகஸ்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

27th May 2021 06:24 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் ஜூலை இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும், ஆகஸ்ட் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா பரவல் குறையாததால் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் குறையாத நிலையில், மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டாம் என்று ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தாலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் கருதி பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். 

கரோனாவால் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் ஜூலை இறுதியில் 12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Tags : general examination West Bengal coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT