இந்தியா

ரயில் போக்குவரத்து மூலம் 1,195 டன் ஆக்ஸிஜன் விநியோகம்

27th May 2021 06:21 PM

ADVERTISEMENT

புது தில்லி: ரயில் போக்குவரத்து மூலம் மே 26-ஆம் தேதி மட்டும் மிக அதிக அளவாக 1,195 டன் உயிர் காக்கும் திரவ ஆக்ஸிஜன் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுதான் ஒரு நாளில் விநியோகம் செய்யப்பட்டிருக்கும் அதிகப்படியான ஆக்ஸிஜன் அளவாகும். இதற்கு முன்பு இது 1.142 டன்னாக இருந்தது.

கரோனா இரண்டாம் அலை தீவிரம்பிடித்த நிலையில், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கும் பணியை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் மூலம் 15 மாநிலங்களுக்கு 18,980 டன் திரவ ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தில்லிக்கு மட்டும் 5,000 டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 284 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் ஈடுபட்டுள்ளன.
 

Tags : ஆக்ஸிஜன் Oxygen Express
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT