இந்தியா

ஒடிசா, மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி நாளை (மே.28) ஆய்வு

27th May 2021 03:58 PM

ADVERTISEMENT

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளார்.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை (மே 26) மதியம் கரையைக் கடந்தது.

இந்தப் புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளிலிருந்த வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டது. எனினும் யாஸ் புயலால் பொருள் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் புவனேஸ்வரில் நடைபெற உள்ள புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

ADVERTISEMENT

Tags : modi Yaas Cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT