இந்தியா

'தடுப்பூசி போடவில்லை எனில் சம்பளம் இல்லை' - சத்தீஸ்கர் அதிகாரி அதிரடி!

27th May 2021 12:54 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் கவுரெலா-பெந்திரா-மார்வாஹி மாவட்டத்தில் உதவி ஆணையராக இருப்பவர் கே.எஸ் மஸ்ராம். இவர், மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், ஆசிரமங்கள் (குடியிருப்பு பள்ளிகள்) மற்றும் விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடவும் தடுப்பூசி செலுத்தியதற்கான அந்தந்த அட்டைகளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊழியராகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி செலுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. வாய்ப்பிருந்தும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வரும் நிலையில் இதுபோன்ற உத்தரவுகள் தேவை தான் என்று சமூக ஊடகங்களால் நெட்டிசன்கள் கருத்து பதிவிடுகின்றனர். 

Tags : சத்தீஸ்கர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT