இந்தியா

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

27th May 2021 11:54 AM

ADVERTISEMENT


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா 2-ம் அலையிலிருந்து மும்பையின் தாராவி முழுமையாக மீண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கரோனா 2ம் அலை தீவிரமடையத் தொடங்கியது முதல் தாராவியில் பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியி சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கரோனா முதல் அலையின் போது தாராவியில் கரோனா வெகுச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது, உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுவரை அங்கு 6,798 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 62 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

ADVERTISEMENT

Tags : Dharavi second wave Mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT