இந்தியா

மீண்டும் தில்லிக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

27th May 2021 11:52 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தில்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து சென்ற அவலங்கள் எல்லாம் அரங்கேறியது. 

இதேபோன்று தலைநகர் தில்லியில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றனர். 

இந்நிலையில் தில்லியில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து  அவர்கள் மீண்டும் தில்லிக்கு நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கரோனா பரவல் குறைந்துவிட்டதால் எனது வாழ்வாதாரத்திற்காக மீண்டும் தில்லிக்குச் செல்வதாக புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

Tags : lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT