இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு தொற்று

27th May 2021 10:40 AM

ADVERTISEMENT


புதுதில்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,83,135 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.73 கோடி (2,73,69,093) ஆகவும் அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,19,907 பேராகவும் குறைந்துள்ளது. 

ADVERTISEMENT

ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,847 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,15,235 -ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,46,33,951-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 2,83,135 குணமடைந்தனர். குணமடைந்தோரின் விகிதம் 90.01 சதவீதமா அதிகரித்துள்ளது.  தொடர்ச்சியாக இரு தினங்களாக தொற்று பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக  9.79 சதவீதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 26 -ஆம் தேதி வரை 33,69,69,352 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. புதன்கிழமை ஒரேநாளில் முதல்முறையாக அதிகபட்சமாக 21,57,857 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 20,26,95,874 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : new COVID19 cases coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT