இந்தியா

ஜெய்ப்பூரில் சதமடித்த பெட்ரோல் விலை

27th May 2021 03:42 PM

ADVERTISEMENT

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100 விலைக்கு விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5 மாநில தோ்தல் நடைபெற்ற நிலையில் எரிபொருள் விலை மாற்றமில்லாமல் இருந்தது. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விலை உயா்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலைகள் மாநிலங்களின் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப விலை சிறிது மாறுபட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் 16 பைசா அதிகரித்து ரூ.100.05க்கும், ஒரு லிட்டா்  ரூ.93.36 க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.06க்கும், டீசல் ரூ.99.94க்கும் விற்பனையாகி வருகிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமும் மத்திய மாநில அரசுகளின் வரியாக உள்ளது. மத்திய அரசு ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.32.90, டீசல் மீது ரூ.31.80 கலால் வரி விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Petrol diesel Price Fuel price
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT