இந்தியா

‘கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்’: கேரள முதல்வர்

27th May 2021 09:36 PM

ADVERTISEMENT

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்

கேரளத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் உடனடி நிவாரணமாகவும், அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையாகவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டம் பெறும் வரை அவர்களது கல்விச் செலவுகளை அரசே ஏற்று கொள்ளும் என முதல்வர் பினராயி விஜயன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Kerala Pinarayi vijayan coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT