இந்தியா

அவங்க அப்பனால்கூட என்னைக் கைது செய்ய முடியாது: பாபா ராம்தேவ்

27th May 2021 04:39 PM

ADVERTISEMENT


அலோபதி மருந்து குறித்து யோகா குரு பாபா ராமதேவ் விமர்சனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது, அவங்க அப்பனால்கூட என்னைக் கைது செய்ய முடியாது என அவர் பேசியிருக்கும் விடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.

கரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ. 1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, தேசவிரோத குற்றச்சாட்டில் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐஎம்ஏ கடிதம் எழுதியுள்ளது.   

இந்த நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி மேலும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ADVERTISEMENT

அந்த விடியோவில், "அவங்க அப்பனால்கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்" என்று ராம்தேவ் பேசுகிறார்.  

இந்த விடியோ பற்றி டோராடூனில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், "ராம்தேவின் பேச்சு முழுக்க முழுக்க ஆணவத்தின் வெளிப்பாடு. அவர் தன்னை சட்டத்துக்கு அப்பாற்பட்டவராக எண்ணிக்கொள்வதையே இது காட்டுகிறது" என்றார்.

Tags : ramdev
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT