இந்தியா

ஒடிசாவில் யாஸ் புயலுக்கு இதுவரை 3 பேர் பலி

27th May 2021 07:38 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் யாஸ் புயலினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது 130-145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் மின்கம்பங்கள், வீடுகளின் கூரைகள், மரங்கள் முறிந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிறப்பு ஆணையர் பி.கே.ஜீனா கூறுகையில், யாஸ் புயல் தற்போது மாநிலத்தை கடந்துவிட்டது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிக மழை பெய்தது. பைதாராணி நதி ஆபத்து நிலையை கடந்துவிட்டது. தற்போது வரை, பைதரணி வெள்ளத்தில் எந்த கிராமமும் பாதிக்கப்படவில்லை. 

அடுத்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 80 சதவீதம் வரை மின்சாரம் வழங்கிட முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மேலும் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட 128 கிராமங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் ஏழு நாள் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

Tags : odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT