இந்தியா

புத்ததேவ் பட்டாச்சாா்யா உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

27th May 2021 01:08 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யாவுக்கு (77) கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நினைவுடன் இருக்கிறார், ரத்தக் கொதிப்பு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததையடுத்து, அவருக்கு ஆக்ஸிஜன் கருவி மூலம் வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அவருக்கு கடந்த வாரம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவா்களின் அறிவுரைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்நிலையில், அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைந்ததையடுத்து, அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் மற்றும் சுவாசம் தொடா்பான பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி புத்ததேவ் பட்டாச்சாா்யா மற்றும் அவரது மனைவி மீராவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் மீரா உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா். ஆனால், புத்ததேவ் பட்டாச்சாா்யா மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததால், வீட்டிலேயே தனிமையில் இருந்தாா். ஆனால், இப்போது கரோனா தீவிரமடைந்துள்ளதால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சாா்யா 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக இருந்தாா்.
 

Tags : Buddhadeb Bhattacharya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT